டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.100 கோடி மோசடி? 4 பேர் பணிநீக்கம்..!
டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக நான்கு HR மேனேஜர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு இந்திய மாணவர்களுக்கும் தாங்கள் படித்து முடித்தவுடன் டாடாவின் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டால் அவர்களது வாழ்க்கையை செட்டில் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் பேர்களை வேலைக்கு சேர லஞ்சம் வாங்கி தர இந்த தொகை சுமார் 100 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து மனித வள பிரிவில் உயர் அதிகாரிகளாக இருக்கும் நான்கு பேர்களை டிசிஎஸ் நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Mahendran