புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 17 மே 2021 (07:00 IST)

புயலை அடுத்து நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி!

குஜராத் மாநிலத்தை டவ்தேவ் புயல் நெருங்கி வருவதாகவும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை குஜராத் மாநிலத்தை புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் குஜராத் மாநிலத்தை கடும் சேதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போது மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் குஜராத் மக்களை புயல் மிரட்டிக் கொண்டிருக்கும் போது சற்று நேரத்துக்கு முன்பு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் என்ற பகுதியிலிருந்து 182 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் இல்லை என்றும் ஆனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. குஜராத் மக்களை ஏற்கனவே புயல் மிரட்டிக் கொண்டிருக்கும் போது தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அம்மாநில மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது