வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (00:12 IST)

அதிநவீன சொகுசு எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் நாளே திருடிய பயணிகள்

இந்தியாவில் சொகுசு ரயிலின் எண்ணிக்கை அதிகாமாகி வரும் நிலையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று வாரணாசி-வதோரா இடையே மஹாமனா என்ற அதிநவீன சொகுசு எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் முதல் நாளில் பயணம் செய்த பயணிகள் ரயிலின் முக்கிய பாகங்களை கழட்டி திருடி கொண்டு சென்ற சம்பவம் ரயில்வே துறையினர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.



 
 
பளபளக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி, தரமான குழாயுடன் கூடிய நீர் வசதி, மெத்தைகள் அடங்கிய இருக்கைகள், சிவப்பு கம்பள தரைவிரிப்புகள், மற்றும் ஜிபிஎஸ் வசதியுள்ள இந்த ரயிலின் முதல் பயணம் முடிந்தவுடன் ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தபோது மூன்று தண்ணீர் குழாய்கள், நான்கு கைப்பிடிகள், இரண்டு தரைவிரிப்புகள், மற்றும் கண்ணாடி, சீட்டின் சில பகுதிகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், இனிமேல் திருட்டுக்களை தடுக்க சிசிடிவி கேமிரா வைக்க முடிவு செய்திருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன