வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (17:35 IST)

பாடகியை பலாக்காரம் செய்த பிரபல நடிகர் கைது!!

பெயர் குறிப்பிடப்படாத பாடகி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததால் நடிகர் மனோஜ் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
போஜ்பூரி சினிமாவின் பிரபல இயக்குனர் ராஜ் குமார் பாண்டேவின் சகோதரர் நடிகர் மனோஜ் பாண்டே. இவர் பாடகி ஒருவருடன் லிவ்விங் டுகெதர் உறவில் வாழ்ந்து அவரை பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அந்த பாடகியை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த மனோஜ் பாண்டே, அவரை படத்தில் நடிக்க வைக்கப்பதாக கூறி பழக ஆரம்பித்துள்ளார். 
 
இந்த பழக்கம் அதிகமாகி ஒரு கட்டத்தில் பாடகி கர்ப்பமாகியுள்ளார். இதனால் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு பாடகி மறுத்தால் பிரச்சனை பெரிதாகி போலீஸ் வரை சென்றது. 
 
இதை தொடர்ந்து மனோஜ் பாண்டேக்கு எதிராக பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.