திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (22:03 IST)

விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும்: நாராயண்

விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும் என்று பாஜகவின் நாராயணன் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கூறினார் 
 
 
யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம் என்று சீமான் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது 'சீமான் போன்றவர்களே அரசியலுக்கு வரும்போது விஜய் போன்ற ஒருவர் அரசியலுக்கு வந்தால் என்ன?  
 
 
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உண்டு என்றும், அதே போல் விஜய் அரசியலுக்கு வருவதையும் நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் கூறினார். மேலும் மெர்சல் பட பிரச்சினையின் போது விஜய்யை ஜோசப் விஜய் என்று பாஜகவினர் கூறியது குறித்து கருத்து தெரிவித்த நாராயணன், விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் தானே, அவருடைய உண்மையான பெயரை கூறினால் என்ன தவறு? விஜய்யே அவ்வாறு கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத போது மற்றவர்கள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார் 
 
 
மேலும் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சீமான் கூறியது குறித்து கருத்து தெரிவித்த நாராயணன் 'ஒரு சில நாட்களுக்கு முன்பு  சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று கூறினார். இப்போது விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறார். ஒரு திரைப்பட இயக்குனராக அவரது எதிர்பார்ப்பை நாம் தவறு என்று சொல்ல முடியாது, அது அவருடைய கருத்து என்று தெரிவித்தார்