1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 31 மார்ச் 2022 (19:47 IST)

மகிழ்ச்சியாக இருந்தது: பிரதமர் சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று டெல்லி சென்று இருந்தார் என்பதும் சில மணி நேரத்திற்கு முன்பு அவர் பிரதமர் மோடியை சந்தித்தார் என்பது தெரிந்ததே
 
இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் 
 
முதலமைச்சரான பின்பு மூன்றாவது டெல்லி பயணம் இது என்றும் நான் வைத்த கோரிக்கைகளை பிரதமர் பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் என்று கூறினார் 
 
மேலும் பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்