வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (13:03 IST)

இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. ஐபிஎல் சூதாட்டம்! – வலைவீசும் போலீஸ்!

கொரோனா காரணமாக தடைப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ள நிலையில் ஐபிஎல் சூதாட்டங்களும் இந்தியாவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் சூடுபிடித்துள்ள நிலையில் சில ரகசிய கும்பல் ஐபிஎல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. பெங்களூரில் சந்தூர் சஷாங் என்ற நபரின் தலைமையில் ஒரு கும்பல் இதற்கென பிரத்யேகமாக மொபைல் செயலிகள் உருவாக்கி சூதாட்டத்தை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் பள்ளி, கல்லூரி இளைஞர்களை குறிவைத்து இந்த சூதாட்டங்கள் நடைபெற்றுள்ளது.

பெங்களூரு போலீஸார் சந்தூர் சஷாங்கை கைது செய்துள்ளதுடன், அவனது கூட்டாளிகள் சிலரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவானவர்களையும் தேடி வருகின்றனர். இந்த சூதாட்டத்திற்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கிலிருந்து 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரையிலும் பல்வேறு போட்டிகளிலும் சூதாட்டம் நடத்தியதில் 100 கோடிக்கும் மேல் பணப்புழக்கம் நடந்திருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஹரியானாவிலும் ஒரு சூதாட்ட கும்பல் சிக்கியுள்ள நிலையில் மாநிலங்கள்தோறும் சூதாட்ட கும்பல்களை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.