புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (08:58 IST)

சர்வதேச அமைதிக்காக செயல்பட்டவர்; பிரதமர் மோடிக்கு பெரும் விருது அளித்த அமெரிக்கா!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு உயரிய விருதான ’லிஜியன் ஆப் மெரிட்’ விருதை வழங்கியுள்ளது.

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை தனது ஆட்சி காலத்தில் மேம்படுத்தியதற்காவும், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார, அரசியல் உறவுகளில் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும் அவருக்கு “லீஜியன் ஆப் மெரிட்” என்ற உயரிய விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த விருதை பிரதமர் மோடி சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இந்த விருதை பெறுவதன் மூலம் பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அவரது கொள்கைகளை அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.