திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 மே 2020 (09:25 IST)

இன்று முதல் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் ஏற்கப்படும் ! ஆனால் ஒரு நிபந்தனை!

இந்தியாவில் பொது  முடக்கம் காரணமாக இரு மாதங்களாக நீதிமன்றங்கள் முழுமையாக இயங்காத நிலையில் இன்று மூதல் மீண்டும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றங்களும் முடங்கின. அதையடுத்து சில அவசர வழக்குகள் மட்டும் காணொலி மூலமாக விசாரிக்கப்பட்டன. டாஸ்மாக் வழக்குகள் இந்த முறையிலேயே விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்றுமுதல் மீண்டும் அனைத்து வழக்குகளையு உச்ச நீதிமன்றம் காணொலி காட்சி மூலமாகவே விசாரிக்க உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் கோடைகாலை விடுமுறையான மே 18 முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் செயல்படும் என்றும் கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது உச்சநீதிமன்றத்தின் இணையதளம் வாயிலாக புதிய வழக்குகளைப் பதிவு செய்வது எப்படி என்று அறிந்துகொள்ள 1881 என்ற இலவச எண் வழங்கப்பட்டுள்ளது.

காணொலி முறையில் நடைபெறும் விசாரணைகள் பதிவு செய்யப்படவோ அல்லது ஒளிபரப்பு செய்யப்படவோ மாட்டாது என்பது உள்ளிட்ட பல விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.