புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 28 மே 2020 (18:14 IST)

புலம்பெயரும் பிரச்சனை: நீதிமன்றம் சொன்ன 4 முக்கிய விஷயங்கள்!

புலம்பெயர் தொழிலாளர்களின் வழக்கில் இடைக்கால தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். 
 
ஊரடங்கு உத்தரவு காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பயண செலவை யார் ஏற்பது என்பது குறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. 
 
இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பை வழங்கியுள்ள நீதிமன்றம் மேலும், அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. நீதிமன்றம் குறிப்பிட்ட முக்கிய 4 விஷயங்கள் பின்வருமாறு... 
 
புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.
 
புலம்பெயர் தொழிலாளர்களின் பயணச் செலவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஏற்க வேண்டும்.
 
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்.
 
புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து ரயில், பேருந்து உள்ளிட்ட எவ்வித பயணக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.