ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 மே 2020 (16:39 IST)

ஊழியர்களின் சம்பளம் தொடர்பான உத்தரவு – கோர்ட்டில் பல்டி அடித்த மோடி அரசு!

கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தைத் தர வேண்டும் என மத்திய அரசு முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தது.

கொரோனா வைரஸ் பேரிடர் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தி வைத்தனர். மேலும் இரு மாதங்களாக பல தொழில் நிறுவனங்கள் இயங்காமல் உள்ளனர். இந்நிலையில் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கவேண்டும் என மத்திய அரசு 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி அறிவித்திருந்தது.

ஆனால் இதற்குப் பல நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இது சம்மந்தமாக மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, தங்களது அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமபளக்குறைப்பு மற்றும் இழுத்தடிப்பு ஆகியவைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.