1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 மே 2023 (14:10 IST)

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி..!

நாடாளுமன்றத்தை வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கும் நிலையில் இந்த கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிட கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 
நாடாளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும் கட்டிடம் திறப்பையும் எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இது போன்ற பொதுநல வழக்குகளை விசாரிப்பது உச்சநீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்தால் எதிர்காலத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
 
Edited by Siva