தடுப்பூசிதான்.. ஆனா ஊசியா போட மாட்டாங்க! – புதிதாக இணையும் டைஜஸ் கெட்டிலா!
மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவதாக டைஜஸ் கெட்டிலா என்ற நிறுவனம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் மூன்றாவது நிறுவனமாக இந்த தடுப்பூசி திட்டத்தில் டைஜஸ் கெட்டிலா தடுப்பூசி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசி மூன்று டோஸ் போடும் வகையில் இருப்பதாகவும், ஊசி மூலம் செலுத்தாமல் மேல் தோலில் அழுத்தம் மூலம் ஊசியின்றி செலுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதன் விலை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.