வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (11:45 IST)

எதன் அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு?? – உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு அரசு பணியிடங்களில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடந்த விசாரணையின்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் “பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு உச்சபட்ச வருமான வரம்பு, ஓபிசி பிரிவினருக்கான உச்ச வரம்பின் அளவில் உள்ளது. ஒரே மாதிரியான வருமான உச்சவரம்பு நிர்ணயிப்பது எப்படி சரியாகும்? எந்த ஆய்வின் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.