வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (10:26 IST)

எங்களுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட பாஜக கவுன்சிலர்கள் (8), முதல் முறையாக கிராம பஞ்சாயத்து தலைவர்கள் (41)  உள்ளூர் வார்டு உறுப்பினர்கள் (332) என பல இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இவர்கள் இன்று பொறுப்புகளை ஏற்க உள்ளனர். பாஜகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள்  கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்.  எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.