வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (13:04 IST)

கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த தீர்மானம் - வானதி சீனிவாசன் விமர்சனம்

கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த தீர்மானம் - வானதி சீனிவாசன் விமர்சனம்
கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இது குறித்து விமர்சனம் செய்து உள்ளார். 
 
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை வைத்து எந்த வகையில் அடக்கி விடுவார்களோ, அதே சாதியை வைத்து இட ஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம் தான் சமூக நீதி தத்துவம் என்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கும் அரசியல் அமைப்பு சட்ட சமூக நீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நடைமுறை என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் தனி தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார் என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கிறிஸ்துவ ஆதிதிராவிடர் தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்
 
Edited by Mahendran