மம்தா-சிபிஐ விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் காவல்துறை ஆணையரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் நேற்றுமுன் தினம் கொல்கத்தா வந்தனர். ஆனால் கைது செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்து அதிரடி காட்டினார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அதுமட்டுமின்றி சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக தர்ணா போராட்டத்தையும் மம்தா நடத்தி வருகிறார்
இந்த நிலையில் காவல்துறை ஆணையரை சிபிஐ கைது செய்ய வந்தது குறித்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சற்றுமுன் விசாரணை செய்த உச்சநீதிமன்றம், 'கொல்கத்தா ஆணையரை சிபிஐ கைது செய்யக்கூடாது என்றும் காவல் ஆணையரை கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை சிபிஐ பெறக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் அதே நேரத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் கொல்கத்தா ஆணையர் சிபிஐ முன் ஆஜராகி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கொல்கத்தா ஆணையரை கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவு பற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் இது தங்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்றார்.