செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (06:11 IST)

மம்தா கெத்து: மேற்குவங்கம் வந்த 5 சிபிஐ அதிகாரிகள் கைது

சீட்டு நிறுவன மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக விசாரிக்க வந்த சி.பி.ஐ. குழுவினர் கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது கொல்கத்தா போலீசார்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டிற்குள் நுழைய முயன்ற  5 சி.பி.ஐ. அதிகாரிகளை மேற்குவங்க போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது. மேலும்  சி.பி.ஐ . இணை இயக்குனரையும் கைது செய்ய மேற்கு வங்க போலீஸ் தீவிரம் காட்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சற்றுமுன் வந்த தகவலின்படி கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தையே தன்கட்டுப்பாட்டில்  கொல்கத்தா போலீஸ் கொண்டு வந்ததாக தெரிகிறது.

பிரதமரின் தூண்டுதலின் பேரிலேயே சிபிஐஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும், 5 ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு தேர்தலுக்கு முன் இந்த வழக்கு குறித்து அவசரம் காட்டுவதாகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க தர்ணாவிலும் ஈடுபடுவேன் என்றும்,  மேற்கு வங்கத்தில் அராஜகத்தை மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் மம்தா குற்றச்சாஞ்ட்டியுள்ளார்.