1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:28 IST)

நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை! – உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

ஜார்காண்டில் நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த நீதிபதி ஒருவர் ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரமணா “நீதிபதிகள் பலர் மிரட்டப்படுகின்றனர், இதுகுறித்த முறையான புகாரளித்தாலும் சிபிஐ, ஐபி ஆகிய புலனாய்வு அமைப்புகள் கண்டுகொள்வதில்லை” என வேதனை தெரிவித்துள்ளார்.