ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:39 IST)

பெகாசஸ் விவகாரம்: ‘இந்து’ என் ராம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

கடந்த சில நாட்களாக நாட்டையே உலுக்கி வரும் பெகாசஸ் விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாஸ் விவகாரம் காரணமாக அவை நடவடிக்கை நடக்க முடியாமல் ஸ்தம்பித்துபோய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெகாஸ் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என இந்து ராம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இன்று நடைபெறும் விசாரணையில் பெகாசஸ் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் பெகாசஸ் விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து ராம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவது அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது