கர்நாடகா வன்முறை: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்


Abimukatheesh| Last Modified திங்கள், 12 செப்டம்பர் 2016 (18:38 IST)
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தொடரும் வன்முறைக்கு உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 
பெங்களூரில் தொடர்ந்து வன்முறை தீவிரமடைந்து வருகிறது. 144 தடையாணை பிரபித்தபோதும் வன்முறை அடங்கவில்லை.
 
இதனால் உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுக்காப்பது மாநில அரசின் பொறுப்பாகும். வன்முறை சம்பங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
பெங்களூரு நகரில் ஒரு கும்பல் காரை அடித்து உடைத்து, புரட்டி போட்டு தீயிட்டு எரிக்கின்றனர். இதுபோன்று பல இடங்களில் வாகனங்களை எதித்து வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :