மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
மேற்கு வங்க மாநிலம் அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெகாசஸ் என்ற செயலி விவகாரம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. எதிர்க்கட்சி பிரபலங்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்கும் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை அமைத்தது என்பதும் அந்த குழு தற்போது விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில அரசு தனியாக இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை குழு அமைத்தது. மேற்கு வங்க மாநில அரசு அமைத்த விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது