1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:19 IST)

நகரப்பகுதிகள் குடிசைகளாகி வருகின்றது! – உச்சநீதிமன்றம் வேதனை!

இந்தியாவில் முக்கிய நகரங்களில் குடிசைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவை குடிசைகள் இல்லாத நாடாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் நகர மயமாக்கல் மற்றும் பிழைப்பு தேடி முக்கிய நகரங்களில் தஞ்சமடையும் மக்கள் காரணமாக நகரங்களில் பல பகுதிகளில் குடிசை பகுதிகள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் மும்பையில் ரயில்வே நிலத்தில் குடிசை போட்டு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையில் “இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் குடிசைகள் முழுவதும் ஒழிக்கப்படவில்லை. இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நாளுக்கு நாள் குடிசைகள் அதிகரித்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.