8 வழி சாலை குறித்து உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்வி!.. மத்திய அரசின் பதில் என்ன??

Last Updated: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (12:13 IST)
சேலம்-சென்னை 8 வழி சாலை குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நிலத்தை கையகப்படுத்தாமல் இந்த திட்டத்தை தொடங்கமுடியாது. நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசுக்கு அனுமதி உண்டு. மேலும் 8 வழி சாலை திட்டம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான திட்டம் என்று தேசிய நெடுஞ்சாலை முறையிட்டுள்ளது. அதன் பின்பு, 8 வழிச் சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தர தாமதமானால் என்ன செய்வீர்கள்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 8 வழி சாலை திட்டத்தை தொடங்கமாட்டோம் என கூறியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :