வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (16:39 IST)

டயர் , வாகனங்களுக்கு தீ ... முதல்வருக்கு எதிராக போராட்டம் : கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா கடந்த மாதம் 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதன்பின்னர்  அவரது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சுயேட்சை எம்.எல். ஏ உள்பட 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.  இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி பாஜக எம். எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மூத்த எம்.எல்.ஏவான உமேஷ் கட்டி, பாகசந்திர ஜார்கிகொளி, ரேணிகாச்சார்யா, திப்பாரெட்டி உள்ளிட்ட பலபேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. எனவே அவர்களின் ஆதவரவாளர்கள் கர்நாடகாவில் உள்ள பல பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். 
 
மேலும் சாலையில் டயர்களை கொளுத்தியும்ம் வாகனங்களுக்கு தீ வைத்தும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.