திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

கையை விரித்த போலீஸ்: சன்னிலியோனுக்கு ரூ.10 கோடி நஷ்டமா?

வரும் புத்தாண்டு தினத்தின் நள்ளிரவில் பெங்களூரு ஸ்டார் ஒட்டல் ஒன்றில் சன்னிலியோன் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக சன்னிலியோனுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன்னிலியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஒருசில கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டம் ஒழுங்கை கவனத்தில் கொண்டு சன்னிலியோன் நிகழ்ச்சிக்கு கர்நாடக அரசு தடை விதித்தது

இந்த நிலையில் சன்னிலியோன் நிகழ்ச்சியை நடத்த ஸ்டார் ஓட்டல் தரப்பினர் தீவிர முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது கர்நாடக போலீசார் சன்னிலியோன் ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவருக்கு பாதுகாப்பு தர இயலாது என்றும், அந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என்றும் அறிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சன்னிலியோன் பெங்களூரு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாகவும், இதனால் அவருக்கு ரூ.10 கோடி இழப்பு என்றும் கூறப்படுகிறது.