1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 ஜனவரி 2023 (18:10 IST)

மெட்ரோ ரெயில் திட்ட பணியின்போது சாலையில் திடீர் பள்ளம்; மக்கள் அதிர்ச்சி

pathole
பெங்களூரில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்து சில நாட்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அசோக் நகர் என்ற பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. 
 
இதனை கவனித்த அதிகாரிகள் அதை சுற்றி வேலை அமைத்து விபத்து ஏற்படாத வகையில் தடுத்தனர். இந்த பள்ளம் ஏற்பட்ட எதனால் என்பது குறித்து புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் 
 
40% கமிஷன் வாங்கிக்கொண்டு மெட்ரோ பணிகள் செய்வதால் தான் தரமற்ற வகையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 
Edited by Siva