செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (09:37 IST)

இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படம் அச்சிட்டால் ?... இது நடக்கும் – சுப்ரமண்ய சுவாமி சர்ச்சைப் பேச்சு !

பாஜக வின் முக்கியத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்ரமண்யசுவாமி இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமி படம் அச்சிடப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சர்ச்சையான பேச்சுக்களுக்காக மிகவும் புகழ்பெற்றவர். நாட்டின் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்குப்  பொருளாதாரம் புரியாது என விமர்சனம் செய்யக் கூடிய அளவுக்கு தைரியமானவர.  இந்நிலையில் தற்போது அவர் பேசிய கருத்து ஒன்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார. அப்போது இந்திய பொருளாதாரம் பற்றி பேசிய அவர் ‘இந்திய ரூபாய் நோட்டில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால் இந்திய பொருளாதாரம் உயரும்’ என கூறியுள்ளார். சுப்ரமண்ய சுவாமியின் இந்த கருத்து  சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.