1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 17 மே 2016 (16:31 IST)

ரகுராம் ராஜனை உடனடியாக நீக்கவேண்டும்: மோடிக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் பாஜக முத்த தலைவரும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தற்போது ரகுராம் ராஜனை உடனயாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 
 
ரகுராம் ராஜன் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார், அவர் மனதளவில் முழு இந்தியராக இல்லை என கூறிய சுப்ரமணியன் சுவாமி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் அமர்த்தப்பட்ட அவரை பதவியில் இருந்து நீக்க நேற்றைய தேதியிட்ட கடிதத்தில் கூறியுள்ளார்.
 
மேலும், ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் வட்டியை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்துள்ளார். பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளது.
 
அமெரிக்காவின் கீரீன் கார்டை வைத்திருக்கும் ரகுராம் ராஜன் தொடர்ந்து அதனை புதுப்பிக்க ஆண்டு தோறும் அமெரிக்கா சென்று வருகிறார். அவர் மன ரீதியாக தன்னை முழு இந்தியராக உணரவில்லை எனவும் பகிரங்கமாக தனது கடிதத்தில் குற்றம்சாடிய சுப்ரமணியன் சுவாமி அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.