1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (09:09 IST)

ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க லஞ்சமாக 2 நடிகைகள்! சுப்பிரமணியன் சுவாமி திடுக் தகவல்

ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க லஞ்சமாக 2 நடிகைகளை கொடுத்தால் அதற்கு என்ன தண்டனை என்று ஆராய்ந்து வருவதாக மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது பரபரப்பான, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது பேட்டியிலும் டுவிட்டரில் தெரிவித்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு டுவிட்டில் ஒரு பிராஜெக்ட்டுக்கு அனுமதி கொடுப்பதற்காக அமைச்சர் ஒருவர் 2 பாலிவுட் நடிகைகளை லஞ்சமாக கேட்டால், அதற்கு என்ன தண்டனை கிடைக்கும்? என்பது குறித்து ஊழல் தடுப்பு சட்டத்தில் ஆராய்ந்து வருகிறேன். இது குறித்து ஆலோசனைகள் கூற விரும்புபவர்கள் தாராளமாக கூறலாம்' என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
தற்போது நடைபெற்று வரும் வழக்கு ஒன்றுக்காக இந்த தகவல் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் அந்த அமைச்சர் யாராக இருக்கும்? அந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் யார்? என்பது குறித்து நெட்டிசன்கள் பரபரப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.