செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (22:18 IST)

ஊழல் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவு என சுப்பிரமணியம் சுவாமி டுவீட்

நான்கு முறை மத்திய நிதியமைச்சர், ஒருமுறை உள்துறை அமைச்சர் என நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்த ஒருவர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தலைமறைவாக இருப்பது சரியா? என பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் கேள்வி மேல் கேள்வி கேட்டு வரும் நிலையில் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமியும் அதே பாணியில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.
 
முன்னாள் நிதியமைச்சர், முன்னாள் உள்துறை அமைச்சர் ஊழல் காரணமாக தலைமறைவாகியுள்ளார். அவரை சிபிஐ வலைவிரித்து தேடி வருகிறது. ப.சிதம்பரம் ஓடி ஒளிந்துள்ளார் என சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றதாகவும், வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என்ற தகவலை அறிந்து திரும்பிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது