1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:04 IST)

பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் கைது! படப்பிடிப்பில் அதிர்ச்சி!

விஜய் ஆண்டனி நடித்து தயாராகி வரும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு குழுவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்து சசி இயக்கத்தில் 2016ல் வெளியான படம் பிச்சைக்காரன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் விஜய் ஆண்டனி இறங்கியுள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, நடித்து, இசையும் அமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அனுமதி பெறாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேலே ட்ரோன் கேமராவை பறக்கவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் படக்குழுவினர் 3 பேரை கைது செய்து பின் ஜாமீனில் விடுவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited by Prasanth.K