வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (10:16 IST)

பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் ஸ்டிரைக்

நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.80.10 ஆகும். இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோலின் விலை ரூ.80ஐ தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 75 ஆகவும், டீசல் விலை ரூ.66 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த கடுமையான விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
 
இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று வாகனங்கள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் உட்பட பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர்.