1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2018 (10:22 IST)

14 வயது மகனை எரித்துக் கொன்று நாடகமாடிய கொடூர தாய்

கேரளாவில் பெற்ற மகனையே எரித்துக் கொன்று விட்டு, மகன் காணாமல் போய்விட்டான் என்று நாடகமாடிய தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஜித்து என்ற 14 வயது சிறுவன் காணாமல் போனதாக அவனது பெற்றோர் கொல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுவனின் தாயாரின் கையில் இருந்த தீக்காயத்தை கண்டு சந்தேகமடைந்த காவல் அதிகாரிகள், சிறுவனின் தாயாரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது மகன், கணவன் வீட்டாரிடம் நெருங்கிப் பழகியதாகவும், இதனை பல முறை கண்டித்த போதிலும் அவன் கேட்கவில்லை என்றார்.
 
சம்பவத்தன்று தனது மகன், கணவரின் உறவினர் வீட்டுக்கு போவதாக கூறினான். இதனால் ஆத்திரமடைந்து அவனை கழுத்தை நெரித்து கொன்று, உடலை தீயிட்டு எரித்து விட்டதாக சிறுவனின் தாயாய் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். பெத்த மகனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.