1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 19 அக்டோபர் 2023 (08:07 IST)

ஆர்.எஸ்.எஸ். பேரணி நீதிபதி அனுமதி.. கடுமையான நிபந்தனைகள் விதித்து உத்தரவு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு கடுமையான நிபந்தனைகள் விதித்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்பவர்கள் 500 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பேரணியின் போது யாரும் சாதி மதம் சார்ந்து பேசவோ பாடல்களை பாடவோ கூடாது என்றும் பேரணி கூட்டத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருச்சி புதுக்கோட்டை தென்காசி நெல்லை உட்பட 16 இடங்களில் வரும் 22ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva