ஆந்திராவில் ஜெகன்மோகன் கட்சி படுதோல்வி அடையுமா? வெற்றி வாய்ப்பில் பாஜக..!
ஆந்திராவில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி படுதோல்வி அடையும் என்றும் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக கூட்டணி அனேக இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சாதகமாக இல்லை என்று தெரிகிறது
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு 25 தொகுதிகள் கிடைக்கும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 7 தொகுதிகள் தான் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
அதேபோல் ஆந்திரா சட்டசபை தேர்தலிலும் ஜெகன்மோகன் கட்சி ஆட்சியை இழக்கும் என்று கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் ஜெகன்மோகன் கட்சி 22 தொகுதிகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva