திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (07:40 IST)

வாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி இருவரும் அஞ்சலி செலுத்தினர்.
 
கடந்த ஜூன் 11 ஆம் தேதி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர்.  பாஜகவும் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தது. 
 
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 5.05 மணிக்கு மரணமடைந்தார். இவரது மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில்  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி இருவரும் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், வாஜ்பாய் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர். தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்ற நிலை வந்த போது அரசியல் சாசனத்தை காத்தவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது என தெரிவித்தார்.