செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (16:53 IST)

அமுல்யாவை கொலை செய்தால் ரூ.10 லட்சம்: ஸ்ரீராம்சேனா அறிவிப்பால் பரபரப்பு

அமுல்யாவை கொலை செய்தால் ரூ.10 லட்சம்:
சமீபத்தில் ஒவைசி எம்பி பேசிய சிஏஏ எதிர்ப்பு போராட்ட கூட்டம் ஒன்றில் திடீரென மேடையில் நுழைந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கூறிய மானவி அமுல்யாவை கொலை செய்தால் ரூபாய் பத்து லட்சம் என ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பெங்களூரில் சமீபத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஒவைசி எம்பி பங்கேற்றார். இந்த போராட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அமுல்யா என்ற இளம்பெண் மேடைக்கு வந்து மைக்கை எடுத்து ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ ’பாகிஸ்தான் வாழ்க’ என முழங்கினார் 
 
இதனையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமுல்யாவை கொலை செய்தால் பத்து லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பு அறிவித்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது 
 
இதுகுறித்து வெளியான வீடியோ ஒன்றில் ஸ்ரீராம் சேனாவின் ஸ்ரீராம் சேனா அமைப்பின் உறுப்பினர்  கூறுகையில், ‘மத்திய மாநில அரசுகள் அமுல்யாவை ஒருபோதும் விடுதலை செய்துவிடக் கூடாது என்றும் அப்படி அந்த பெண்ணை விடுதலை செய்தால் நாங்கள் படுகொலை செய்வோம் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் அவரை கொலை செய்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் இது போன்ற எந்த ஒரு அறிவிப்பும் எங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும் இது குறித்து யாராவது ஆதாரத்துடன்  புகார் செய்தால் விசாரணை செய்வோம் என்றும் கூறி உள்ளனர்