புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (08:45 IST)

அமெரிக்க பாப் பாடகர் சுட்டுக்கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாப் ஸ்மோக்
பிரபல அமெரிக்க பாப் பாடகர் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 20 வயதே ஆன இளம் பாடகர் பாப் ஸ்மோக். அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இவரது ராப் பாடல்களுக்கு பெரும் ரசிகர்கள் உண்டு. பாப் ஸ்மோக் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மேற்கு ஹாலிவுட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாப் ஸ்மோக் வீட்டிற்குள் கொள்ளைக் கும்பல் ஒன்று புகுந்துள்ளது. அவர்களை தடுக்க முயன்றபோது பாப் ஸ்மோக்கை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாப் ஸ்மோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் ராப் ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.