வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (16:57 IST)

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இந்திய விலை எவ்வளவு? – டாக்டர் ரெடிஸ் லேப் தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு எதிராக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ள நிலையில் அதன் விலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப் அனுமதி பெற்றுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு சந்தையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை 10 டாலர்கள் என்னும் வகையில் இந்திய ரூபாய்க்கு கணக்கிட்டால் 750 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் விலை குறித்த இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என ரெட்டிஸ் லேப் கூறியுள்ள நிலையில், இந்தியாவில் உற்பத்தி தொடங்கினால் விலை குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.