1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (13:47 IST)

ஜெயலலிதா வழியில் மத்திய அரசை தெறிக்க விடும் எடப்பாடியார் - ஐடி ரெய்டில் செக் வைக்கும் மோடி

மத்திய அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்த எடப்பாடியார், தற்பொழுது மத்திய அரசின் சில திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.


ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என நினைத்தது மத்திய அரசு. ஆனால் தமிழகத்தில் டெபாஸிட் கூட வாங்க முடியாத சூழலில் இருந்த மத்திய அரசு, எடப்பாடியார் முதுகில் ஏறி சவாரி செய்ய திட்டமிட்டது.
 
பின் அவர்களுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ்சை தங்கள் வழிக்கு கொண்டுவர அவருக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டினுள் ரெய்டு விட்டது மத்திய அரசு. பின் பயந்து கொண்டு ஓபிஎஸ் வழிக்கு வந்தார். ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
எங்கே ரெய்டில் மாட்டிக்கொள்வோம் என நினைத்து மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஆதரித்து வந்த எடப்பாடியார் திடீரென ஜெயலலிதா பாணியை கையில் எடுத்துள்ளார். 
 
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, உயர்கல்வி ஆணைய மசோதா ஆகியவற்றை அமல்படுத்த முடியாது என மத்திய அரசுக்கு கடித எழுதினார் எடப்பாடியார். மேலும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் எந்த விதமான மத்திய அரசின் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என அதிமுக அமைச்சர்களும் எடப்பாடியாரும் கூறி வருகின்றனர்.
இவ்வளவு நாள் நமது கட்டுப்பாட்டில் இருந்த முதல்வர், இப்படி மாறிவிட்டதை உணர்ந்த மத்திய அரசு அவர்களை மீண்டும் வழிக்கு கொண்டு வர வருமான வரித்துறை ரெய்டை கையிலெடுத்துள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் சாலைப்பணிகள் உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் தற்பொழுது அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 160 கோடி ரூபாய் பணமும் 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுறைக்கும் எடப்பாடியாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரை தங்கள் வழிக்கு கொண்டு வரவே மத்திய அரசு இப்படி செய்கிறது என பலர் கூறி வருகின்றனர்.
அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு புகாரை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். 
 
ஆனால் இதற்கெல்லாம் பயப்படாமல் எடப்பாடியார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறாரா? அல்லது மீண்டும் பயந்து கொண்டு மத்திய அரசிற்கு அடிபணிவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.