1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (10:21 IST)

தென் இந்தியர்களை அவமதித்ததா நத்திங் போன் நிறுவனம்? – ட்விட்டர் ட்ரெண்டால் சர்ச்சை!

Nothing
சமீபத்தில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்ட நத்திங் நிறுவனம் தென் இந்திய பயனாளர்களை அவமதித்ததாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த நத்திங் போன் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் Nothing Phone 1 நேற்று மாலை உலக அளவில் வெளியிடப்பட்டது. இந்த போனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் போன் குறித்த விவரங்களை விசாரிக்க ஒருவர் நத்திங் நிறுவனத்தை தொடர்பு கொண்டதாகவும், அதற்கு அந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் தென்னிந்தியர்களுக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு எழுந்தது. அதை தொடர்ந்து பலரும் ட்விட்டரில் நத்திங் ஸ்மார்ட்போனை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேகுகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் அவ்வாறாக அந்த நிறுவனம் எந்த அவதூறான பதிலையும் அளிக்கவில்லை என்றும், இணையத்தில் பரவும் அந்த தகவல் போலியானது என்றும் பலர் கூறி வருகின்றனர்.