1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:16 IST)

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி: திருமாவளவன் கோரிக்கை!

45 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் மனு அளித்துள்ளார் இந்த மனு விரைவில் பரிசீலனை செய்யப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன