பாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் !

Last Modified சனி, 3 ஆகஸ்ட் 2019 (14:58 IST)
சோனி நிறுவனம் கையடக்க ஏ.சி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பருவநிலை மாற்றங்களால் நாளுக்கு நாள் பூமியின் வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறது.  இதனால் பகல் நேரங்களில் வெயிலில் வெளியேப் போவதே இயலாத காரியமாகிக் கொண்டு வருகிறது. இதையடுத்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சோனி நிறுவனம், கைக்கு அடக்கமாக ஏசி எந்திரத்தை சோனி நிறுவனம்  அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பாக்கெட் ஏசியுடன் டி ஷர்ட் ஒன்றைத் தருகிறார்கள். இந்த டி-ஷர்ட்டின் பின்புறத்தில் அந்த ஏசியை வைக்கும் அளவிற்கு ஒரு பாக்கெட் இருக்கிறது. அந்த டிஷர்ட்டின் பின்புறம் ஒரு பாக்கெட் உள்ளது. அதில் அந்த ஏசியை வைத்துக்கொண்டு அதன் மேல் சட்டை அணிந்துகொண்டால் குளிர்ந்த காற்று நம் உடல் முழுவதும் பரவும். இந்த பாக்கெட் ஏசியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 1.30 மணிநேரம் பயன்படுத்தலாம். இதை புளூடூத் மூலம் மொபைல் போனில் இணைத்து ஏசியின் அளவை மாற்றியமைக்கலாம். இந்த பாக்கெட் ஏசி, இந்திய மதிப்பில் ரூ. 8992 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :