வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (11:10 IST)

பாதயாத்திரைக்கு வந்த சோனியா காந்தி! – காரில் ஏற்றி அனுப்பிய ராகுல்காந்தி!

Soniya Gandhi
இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல்காந்தி நடத்தி வரும் நிலையில் அதில் அவரது தாயார் சோனியா காந்தியும் கலந்து கொண்டார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கன்னியாக்குமரியில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து கேரளா வழியாக யாத்திரை செய்த அவர் கர்நாடகத்தை அடைந்துள்ளார்.

தசரா, விஜயதசமி பண்டிகைகளால் கடந்த 2 நாட்களாக ஓய்வெடுத்த ராகுல்காந்தி இன்று மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கியுள்ளார்.


இந்த பாதயாத்திரையில் இன்று காங்கிரஸ் கூட்டணி தலைவரான சோனியா காந்தி கலந்து கொண்டார். ராகுல்காந்தியோடு சிறிது தூரம் அவர் நடந்த நிலையில், அதிகம் நடக்க வேண்டாம் என தனது தாயாரை ராகுல்காந்தி காரில் ஏற்றி அனுப்புவித்தார்.

Edited By: Prasanth.K