திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (12:23 IST)

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் சோனியா காந்தி?

தீவிர அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 
உடல் நலக்குறைபாடு காரணமாக, கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி ஓய்வில் இருக்கிறார். அந்நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டார். நாளை அவர் பதவியேற்கிறார். 
 
இந்நிலையில், இன்று பாராளுமன்றத்திற்கு வந்த சோனியா காந்தி செய்தியாளர்களிடம் பேசிய போது, நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.
 
எனவே, மெல்ல மெல்ல அவர் ராகுல் காந்தியிடம் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.