வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (10:23 IST)

ராஜீவ் காந்தி 27-ஆம் ஆண்டு நினைவு தினம் - சோனியா காந்தி அஞ்சலி

ராஜீவ் காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள், ராஜீவ் காந்தி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இன்றோடு அவர் கொல்லப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன.
 
இந்நிலையில் ராஜீவ் காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.