வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:34 IST)

சனாதன எதிர்ப்புக்கு ராகுல், சோனியாவே காரணம்: ஜெ.பி.நட்டா ஆவேசம்..!

jp nadda
சனாதன எதிர்ப்புக்கு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தான் காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாதெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்கள் ஆகவே சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துக்களை பகிரங்கமாக அறிவித்து வருகிறார். 
 
இந்த நிலையில் சனாதன எதிர்ப்புக்கு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தான் காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு சனாதன வெறுப்பு இருக்கிறது என்றும் இதுகுறித்து அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva