வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (18:40 IST)

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

Raped
உத்தரபிரதேச மாநிலத்தில் பெற்ற தாயை அவருடைய 48 வயது மகன் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 
 
உத்தரபிரதேசத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 48 வயது நபர் ஒருவர், தனது மனைவி இறந்த பிறகு தாயை மனைவியாக இருக்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில், திடீரென தாயை தோட்டத்திற்குள் தூக்கி சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன் பின்னர் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில், தாயின் வாக்குமூலத்தை எடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பில் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva