1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (12:38 IST)

1000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பம் இருக்காது- விஞ்ஞானி நிகர் ஷாஜி

Nigar Shaji
இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பமும் பூமி உள்ளிட்ட கோள்களும் இருக்காது என்று ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர்   நிகர் ஷாஜி கூறியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில்,  சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிககரமான சந்திரனில் தரையிறக்கியது.

இதையடுத்து, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

பூமியை 4 சுற்றுவட்டப்பாதைகளில் சுற்றி விரிவடைந்து சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான எல்-1 பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும். இதற்கான சுற்றுவட்டப்பாதை உயர்த்துதலில் 4வது சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ இன்று  தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பமும் பூமி உள்ளிட்ட கோள்களும் இருக்காது என்று ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர்   நிகர் ஷாஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்தக் குடும்பம்  செயல்படத் தேவையான எரிபொருள் இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடையும். அதன்பின், சூரியன் விரிவடைந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும்….இன்னு 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு சூரியக் குடும்பம்  மற்றும் பூமி உள்ளிட்ட கோள்கள் இருக்காது'' என்று தெரிவித்துள்ளார்.